லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு
ஹட்டன் (Hatton) நகரில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் மற்றும் இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரண்டு மூன்று நாட்களாக எரிவாயு சந்தையில் எரிவாயு கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, அரசாங்கம் மேற்கொள்ளும் பொருட்களின் விலை குறைப்பு, எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையின் பலன் மக்களுக்கு சென்றடையக்கூடாது என சிலர் திட்டமிட்டு தடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எரிவாயு பற்றாக்குறை
இதன் காரணமாகவே இந்த எரிவாயு பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மற்றும் இந்த எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகங்களும் எழுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கினிகத்தேனை பிராந்திய எரிவாயு விநியோக நிலையத்திலிருந்து மூன்று நான்கு நாட்களாக எரிவாயு விநியோகம் செய்யபடாமையால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்களும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |