அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து விசேட அறிவித்தல்
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை இன்று (23.7.2024) ஜனாதிபதி ஊடகப் பிரிவு (Presidential Media Unit) வெளியிட்டுள்ளது.
ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலில், இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி
மேலும், அனைத்து முன்மொழிவுகளின் பிரதியை PDF வடிவில் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09-08-2024 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதியத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
தனியார் துறை ஊழியர்
அதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் 17,500 ஆக உயரும்.
தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு 2016 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தத்திற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வு
ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |