சர்வதேச ரீதியில் சிகிரியாவிற்கு கிடைத்த அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் இலங்கையின் சிகிரியா (Sigiriya) முதலிடம் பிடித்துள்ளது.
தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த வலைத்தளமானது 2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட 10 நகரங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
10 நகரங்களின் பட்டியல்
அதன்படி அந்த பட்டியலில் முதல் இடத்தில் சிகிரியா உள்ளதுடன் ஸ்பெயினில் உள்ள காசோர்லா மற்றும் பிரேசிலில் உள்ள உருபிசி, நியூசிலாந்திலுள்ள டௌபோ.
அமெரிக்காவிலுள்ள சென் அகஸ்டின், இத்தாலியிலுள்ள ஓர்வியோட்டா, கொலம்பியாவிலுள்ள மணிசேல்ஸ், ஜேர்மனியிலுள்ள குவெட்லின்பர்க், தாய்லாந்திலுள்ள கோ லந்தா, பிரித்தானியாவிலுள்ள செஸ்டர் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த தனித்துவமான இடங்களின் அழகை பயணிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள உதவும் குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளும் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)