அரச தலைவர் செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள்
srilanka
police
Presidential Secretariat
Signal jammers
By Kiruththikan
அரச தலைவர் செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள அரச தலைவர் செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேரலையாக செய்திகளை வெளியிட முடியாத வகையில் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சர்வதேச ஊடகங்களின் பார்வை சிறிலங்கா நோக்கி நகர்ந்துள்ளது.
இந்தியா உட்பட பல சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்கள் கொழும்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி