அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து போராட்டம்!
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் (06.01.2025) யாழ்ப்பாணம் (Jaffna) பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம்
பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் எனப் பலர் கையெழுத்திட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |