இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் அழியப்போகும் இலங்கை: அபாய அறிவிப்பை வெளியிட்ட விமல்வீரவன்ச
எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் 'எட்கா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்ட பின்னர், எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வரலாம், சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள் நாட்டில் சிறுபான்மையினராக மாறுவதும் தவிர்க்க முடியாதது. என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அன்றிலிருந்து இலங்கை இறையாண்மையை இழக்கும் என்றும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள இத்தருணத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் இறையாண்மையை பலிகொடுத்து வருவதாகவும், அந்த பாவ நடவடிக்கைக்கு தினேஷ் குணவர்தனவும், ராஜபக்சவும் "விளக்கை" ஏற்றி வருவதாகவும் வீரவன்ச தெரிவித்தார்.
9ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையின் தலைவிதி
9ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையின் தலைவிதி என்ற தொனிப்பொருளில் கடுவெல கொஸ்வத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |