இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்களாம்.... வைத்து பாருங்கள்
பாரம்பரிய இந்திய கட்டிட கலையில் வாஸ்து சாஸ்திரம் ஓர் இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. பொதுவாக ஒரு வீடு கட்டுவதற்கு முன்பு வாஸ்து பார்ப்பது ஓர் முக்கிய செயலாக இருக்கிறது.
இதை நம்பலாமா, இல்லை கூடாதா என்ற கேள்வி நிறைய பேர் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது வாஸ்துவினால் பலன் பெற்றோரின் கருத்து.
மீன் தொட்டி
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சிறு மீன் தொட்டியும் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக மீன் தொட்டியை வீட்டின் படிக்கும் அறையில் வைப்பதே சிறந்தது. அதிலும், அறையின் கிழக்கு, வட-கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்திருப்பது மிகவும் சிறந்தது. இதனால் வீட்டில் எப்போதும் அமைதி நிலவும்.
பூந்தொட்டி
சிறந்த நறுமணம் மிக்க மலர்கள் அடங்கிய பூந்தொட்டிகளை வீட்டின் படிக்கும் அறையில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிப்பதோடு, வீட்டின் அமைதியும் மேம்படும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். படிக்கும் அறையை காட்டிலும் பூந்தொட்டிக்கு சிறந்த இடம் என்றால் அது வீட்டின் முன் கதவு அருகே வைப்பது தான். இதில் நீங்கள் மறக்க கூடாத ஒரு விஷயம் என்றால், தினந்தோறும் பூந்தொட்டிக்கு தண்ணீர் மற்றும் பூக்களை மாற்றியே ஆக வேண்டும்.
புத்தர் சிலை
புத்தர் என்றாலே அமைதி என்பது அனைவரும் அறிந்தது. அதிலும், வீட்டில் புத்தர் சிலையை வைப்பதன் மூலம் வீ்ட்டில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை. வீட்டில் புத்தர் சிலையை வைக்கும் பொதுவான இடங்கள் படிக்கும் அறை, தோட்டம் அல்லது சமையலறை.
காற்றில் ஆடும் மணிகள் (wind chimes)
வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்வதற்கான மற்றொரு வழி என்றால் அது தான் வின்ட் சைம்ஸ். பொதுவாக அனைவரது வீட்டிலும் இதை காண முடியும். இதனை மாட்டுவதற்கான சரியான இடம் வீட்டின் வாசல் தான்.
ஓவியங்கள்
ஒரு சில வகை குறிப்பிட்ட ஓவியங்கள் கூட வீட்டிற்கு நல்ல அதிர்ஷடத்தை கொண்டு வரும். அவற்றில் நீர் வீழ்ச்சி ஓவியங்கள், ஓடும் நதி மற்றும் கோல்ட் ஃபிஸ் போன்றவையும் அடங்கும். பசுமையான காடுகள் மற்றும் பச்சை பசேல் வயல்வெளிகள் போன்ற இயற்கை காட்சிகளளை சித்தரிக்கும் ஓவியங்களும் மிகவும் பொருத்தமானவை.
சிறு தாவரங்கள்
உங்களுக்கு வீட்டிற்குள் வைத்து செடிகள் வளர்க்கும் ஆர்வம் கொண்டவராக இருந்தால், மணி ப்ளாண்டை தேர்வு செய்யுங்கள். இது அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளத்தை ஈர்க்கும். அதிலும், மணி ப்ளாண்டை பச்சை நிற பாட்டில் அல்லது தொட்டியில், வீட்டின் வடக்கு மூலையில் வைத்து வளர்ப்பது செல்வ வளத்தை பெருக்குவதோடு, வேலை அல்லது தொழிலில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். சிறு மூங்கில் செடிகளை வீட்டில் வளர்ப்பது கூட உங்களை செல்வந்தராக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.