விபத்துக்குள்ளான வெளிநாட்டு கப்பலுக்கு அனுமதி: வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்
அமெரிக்காவின் (America) மேரிலேண்ட் மாநிலத்தில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் (Francis Scott Key Bridge) மோதி விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தக் கப்பல் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நேற்று(02) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அனுமதி
அதன்படி, இன்றையதினம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதன் மூலம் கப்பலின் வருகை தொடர்பில் கோரிக்கையையோ அனுமதியையோ பெறவில்லை என அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பேசல் உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு நாட்டின் துறைமுகத்தின் ஊடாக அபாயகரமான கழிவுகளை கடத்துவதற்கு பேசல் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திடம் அனுமதிப் பெறவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பல் விபத்து
இலங்கை (Sri Lanka) நோக்கிய 27 நாள் பயணத்தை ஆரம்பித்த சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 26 ஆம் திகதி அமெரிக்காவில் விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் குறித்த கப்பல் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக குறித்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நீரில் வீழ்ந்து மூழ்கின.
இதனால் பல சேதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், காணாமல் போன ஆறு பேரில் இரண்டு பேரின் உடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |