திரைத்துறையில் மீண்டும் ஒரு சோகம்:மறைந்தார் பாடகர் கிருஷ்ணராஜ்
Deva
Death
Tamil Singers
By Sindu
பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (22) காலமானார்.
உடல்நலக் குறைவினால் அவரது 75ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.
300இற்கும் அதிக பாடல்கள்
இவர் பாடிய பாடல்களில் 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா', 'தஞ்சாவூர் மண்ணு எடுத்து', ‘கண்ணும் கண்ணும் பார்த்துகிட்டா’, ‘சோக்கு சுந்தரி’ உள்ளிட்ட பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த கிருஷ்ணராஜ், உடல் நலக்குறைவு காரணமாக ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் காலமாகியுள்ளார்.
தமிழில் மட்டுமே 300இற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
இவரது உடல் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி