இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி

Mano Ganeshan Sri Lanka SL Protest Australia Sri Lankan political crisis
By Vanan Sep 25, 2022 05:03 PM GMT
Report

சிங்கள - பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து, இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டரீதியாக மாற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

மெல்பேர்ன் நகரில் சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன், அவுஸ்திரலியாவின் பன்மைத்துவ சூழலில் சந்தோஷமாக வாழும் நீங்கள், தாய்நாடு மாத்திரம், ஒரு மதம், ஒரு இனம் என்ற ஏகபோக சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது சிற்சில இடங்களில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், மக்களும் இணைந்திருந்த போதிலும் பெரும்பாலும் சிங்கள மக்களின் போராட்டமாகவே அவை முன்னெடுக்கப்பட்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.

இலங்கையில் நாடு பூராவும் போராட்டங்கள் நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள சிங்கள புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள மக்களுக்கான பாரிய பொறுப்பு

இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி | Sinhala Buddhist Country Sri Lanka Legally Change

அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போதே உலகம் முழுவதும் பெருவாரியான சிங்கள மக்களும் வாழ்கிறார்கள் என்பதை பலர் அறிந்து கொண்டார்கள் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு இன்று பாரிய பொறுப்பொன்று உள்ளது என கூறியுள்ள அவர், அவுஸ்திரேலிய அரசாங்கமே முன்வந்து, சிங்கள மொழி கலாசாரம் உட்பட சுமார் 68 மொழி கலாசாரங்களை வளர்த்து விடுகிறது என சுட்டிக்காட்டினார்.

அவுஸ்திரேலியாவில் பன்மொழி, பல்லின, பன்மத கலாசாரம் ஒரு சுமையாக கருதப்படாமல், சாதகமாக கொண்டாடப்படுவதுடன், அது அரசாங்க கொள்கையாகவே முன்னெடுக்கப்படுகிறது எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

சிங்கள தலைவர்களுக்கு எடுத்துச் செல்லுதல்

இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி | Sinhala Buddhist Country Sri Lanka Legally Change

இந்த பன்மைத்துவ செய்தியை இலங்கையின் சிங்கள தலைவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள் எனவும் அது உங்கள் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து இலங்கை, ஒரு பன்மைத்துவ நாடு என்ற நிலைமைக்கு சட்டரீதியாக மாற வேண்டும் எனவும் இலங்கை ஒரு பன்மைத்துவ நாடாக உதவுங்கள் எனவும் மனோ கணேசன் சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறும் போதே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சியை பெற முடியும் எனவும் இதுபற்றிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் சிங்கள இலங்கையர்களிடம் இருக்கிறது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026