இது சிங்கள பெளத்த நாடு - சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை!

Parliament of Sri Lanka Sarath Weerasekara Sri Lanka Tamil National Alliance
By Kalaimathy Sep 08, 2022 10:11 AM GMT
Report

இலங்கை, சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், வேறு ஒரு நாடு என்றால், பெரும்பான்மையினரின் மத வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர் காணாமல் போயிருப்பார் எனவும் சிறிலங்கா நாடாளுமன்றில் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குருந்தூர் மலையில் சட்டவிரோத விகாரை அமைப்பது தொடர்பில் விகாராதிபதி தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே "இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது" என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு மறைமுக எச்சரிக்கை

இது சிங்கள பெளத்த நாடு - சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை! | Sri Lanka Sinhala Country Sarath Weerasekara Tna

அதுமட்டுமன்றி, இதுவே வேறு நாட்டில் என்றால் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார் என்றும் மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறுவர் மற்றும் தாய்மார்களின் மந்தபோசனை தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

"ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.

தொல்பொருள் பணியை நிறுத்தும் தீய எண்ணம்

இது சிங்கள பெளத்த நாடு - சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை! | Sri Lanka Sinhala Country Sarath Weerasekara Tna

தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார். முல்லைத்தீவு நீதிவான் அந்த நிர்மாணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் காவல்துறையினர் நகர்த்தல் பத்திரமொன்று மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடன் அந்த இடத்துக்குச் சென்று அவதானித்து அந்த வழக்கை நீக்கிக்கொண்டுள்ளனர்.

இதன்படி தொல்லியல் திணைக்களத்துக்கு அதனைப் பராமரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. குருந்தூர் அசோக விகாரை என்பது 2 ஆயிரம் வருடங்கள் வரையில் பழமையான பௌத்த விகாரை தொகுதியாகும்.

தீபவம்சம் மற்றும் மகாவம்சத்துக்கு அமைய குருந்தூர் மலை உண்மைக் கதையை எழுதிய வரலாற்று இடமாகும். அங்கு அகழ்வுகளின் போது புத்தர் சிலைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பினர் வெட்கப்பட வேண்டும்

இது சிங்கள பெளத்த நாடு - சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை! | Sri Lanka Sinhala Country Sarath Weerasekara Tna

ஆனால், அங்கு எந்த இடத்திலும் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று நடந்த சம்பவத்துக்கு வெட்கப்பட வேண்டும்.

இங்கு புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் பௌத்த பீடங்களின் நாயக்க தேரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் குண்டர் குழுக்களுடன் சென்று அதைக் குழப்பினர். மலர் ஒன்றை வைத்துக்கூட பூஜை செய்ய முடியாத வகையில் பிக்குகள் திரும்பிச் சென்றிருந்தனர்.

இந்த பௌத்த நாட்டில் பெளத்த சாசனத்தை அவமதிக்கும் வேலையைச் செய்தும், பெளத்தர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதை மௌனித்திருப்பதாகக் கருத வேண்டாம் என்று அன்று நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.

அரந்தலாவ படுகொலை 

இது சிங்கள பெளத்த நாடு - சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை! | Sri Lanka Sinhala Country Sarath Weerasekara Tna

அன்று விடுதலைப்புலிகள், மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களையும் கொலை செய்யும் போதும் கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன.

பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டு வந்துள்ளது.

இது பௌத்த நாடாகும். சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார்.

நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை. அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும். இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் இந்த நாட்டில் அமைக்கப்படுகின்றன.

சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இன சுத்திகரிப்பு

இது சிங்கள பெளத்த நாடு - சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை! | Sri Lanka Sinhala Country Sarath Weerasekara Tna

அதற்கு பௌத்தர்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடுவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்குக்குப் போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குருந்தூர் விகாரை பராமரிப்புக்காக இடைவிடாது செய்யும் இடையூறுகளை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மிகவும் விநயமாக அவர்களிடம் கேட்கின்றோம். இந்தப் பராமரிப்புப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் நிறுத்தாது முன்னெடுத்துச் செல்லும். 

இதேவேளை, இந்த நடவடிக்கைகளால் இனச் சுத்திகரிப்பு செயற்பாடு நடக்கும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் இருந்தன.

இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர். அங்கு இப்போது எவ்வளவு முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன? உண்மையில் இனச் சுத்திகரிப்பு நடந்திருந்தால் சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடந்திருக்கும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சரியான பாதைகளைக் காட்டுங்கள், இல்லாவிட்டால் இவர்களை விரட்டியடிங்கள் என்று நான் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011