மட்டக்களப்பில் மூடப்பட்ட சிங்கள பாடசாலைகள் மீள திறக்கப்படவில்லை : வருத்தப்படும் தேரர்
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரின் போது மூடப்பட்ட பதின்மூன்று சிங்களப் பாடசாலைகளில் ஒரு பாடசாலையைக் கூட இதுவரை எந்த அரசாங்கமும் திறக்காதது வேதனையளிக்கிறது என கல்குடா ஸ்ரீ சீலாலங்கார பௌத்த நிலையத் தலைவர், தேவகலா தேவலங்கார தெரிவித்தார்.
யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிங்கள மக்கள் பெருமளவில் கிராமங்களை விட்டு வெளியேறிய போதிலும், யுத்தம் முடிவடைந்த பின்னர் பிள்ளைகளுடன் மீண்டும் திரும்பிய போதும் சிங்களவருக்கு காணி, இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏராளம்.
ஒரு சிங்களக் குடும்பம் கூட மீள்குடியேற்றப்படவில்லை
இப்படி வரும் சிங்கள மக்களுக்கு பள்ளிக்கூடம் என்பது பெரிய பிரச்சனை. யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலைநாட்டப்பட்டு பதினான்கு வருடங்கள் கடந்தும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் ஒரு சிங்களக் குடும்பம் கூட மீள்குடியேற்றப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள பாடசாலை மாணவர்கள் அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளனர்.கல்குடாவில் நன்கொடையாளர்கள், பரோபகாரிகளின் உதவியுடன் சிங்களப் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், புன்னக்குடாவில் முன்பள்ளி மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தேவலங்கார பீடாதிபதி குறிப்பிட்டார்.
மூடப்பட்டுள்ள 13 பாடசாலைகளில்
இந்த நிலையை உணர்ந்து கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 பாடசாலைகளில் ஒன்றையாவது ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கவேண்டும்
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களப் பாடசாலைகளை நிறுவுவதற்கோ அல்லது தற்போது வாழும் சிங்களக் கிராம மக்களுக்கோ முழுமையான காணி உரிமைகள், கல்வி, சுகாதாரம், குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்து வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிவாரணத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.