சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி இல்லை! ரவிகரன் கடும் எதிர்ப்பு

Mullaitivu Thurairajah Raviharan
By Independent Writer Dec 23, 2025 01:39 PM GMT
Report

தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறியுள்ளார்.

இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

தமிழ் மக்களுக்குரிய காணிகள்

கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்தில் வசித்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, எமது தமிழ் மக்களின் பூர்விக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் குடியேறினர்.

சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி இல்லை! ரவிகரன் கடும் எதிர்ப்பு | Sinhalese Have No Land In Kokutoduwai

எமது தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறே பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் உள்ளது.

இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன.

ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்கமுடியுமா என்பதற்கு உரியவர்கள் பதிலளிக்கவேண்டும்.

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொக்குத்தொடுவாய் காணி

இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி இல்லை! ரவிகரன் கடும் எதிர்ப்பு | Sinhalese Have No Land In Kokutoduwai

இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன்.

அத்தோடு புலிபாய்ந்தகல்லில் சுற்றுலாத்தளத்துக்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும் ஆக்கிரமித்து, அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கடந்த காலத்தில் தமிழர்களின் பூர்விக மணலாற்றுப் பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர்.

இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச் செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019