தமிழ் மக்களின் கைகளில் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பகுதிகள் - புவியியல் ரீதியிலும் மாற்றம்

Mullaitivu Vavuniya Gajendrakumar Ponnambalam Buddhism
By Vanan Jun 23, 2023 04:06 AM GMT
Report

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால், தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

போர்க் காலப் பகுதியில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், அவர்களின் வாழ்வாதார காணிகளை சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் வழங்கியு்ளளதாக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காணிகள் பறிபோயின

தமிழ் மக்களின் கைகளில் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பகுதிகள் - புவியியல் ரீதியிலும் மாற்றம் | Sinhalese Settlements In Mullaitivu Vavuniya

மேலும் உரையாற்றிய அவர், “போரினால் பெரும்பான்மையான மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். நான் விசேடமாக சில இடங்களை குறிப்பிட வேண்டும். முல்லைதீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் மேற்கு, சின்னக்குளம், முத்திரிகைகுளம், ஆமையான் குளம், சாம்பன்குளம், தட்டாமலைக்குளம், பறையனாறு வயல் நிலங்கள், சூரியநாராயனாறு வயல் நிலங்கள், வவுனியா வடக்கில் கொக்கச்சான்குளம், கச்சல் சமனல்குளம் ஆகிய இடங்கள், 83 இறுதி மற்றும் 84 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவம் அறிவுறுத்துகின்றது.

ஆட்கள் அல்லாத பகுதிகளாக அந்தப் பகுதி பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் பகுதிகளாக இருக்கும் என்பதால், அங்கிருந்து வெளியேறுமாறு மக்களை கோரியது. ஆகவே இந்தப் பகுதியில் உள்ள மக்கள் இடம்பெயர்ந்தனர்.

நான் வாசித்த இந்த இடங்களில் இருந்து மக்கள், முற்றுமுழுதாக இடம்பெயர்ந்தனர் .இந்த மக்களால் தமது இடங்களுக்கு செல்ல முடியாது போனது. இது 1983 மற்றும் 84 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றது. அதன்பின்னர் 2009 ஆம் ஆண்டே அவர்கள் அந்த இடங்களுககு செல்ல முடிந்துள்ளது.

மக்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வவுனியா நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச அழுத்தங்களை அடுத்து மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட போது, கொக்குத்தொடுவாய் மேற்கு பகுதிக்கும் வவுனியா மேற்கு பகுதிக்கும் மக்கள் சென்ற போது, இந்தக் கிராமங்களில் உள்ள அவர்களது காணிகள் பறிபோயிருந்தன.

சிங்கள - பௌத்த இனவாதம்

தமிழ் மக்களின் கைகளில் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பகுதிகள் - புவியியல் ரீதியிலும் மாற்றம் | Sinhalese Settlements In Mullaitivu Vavuniya

இணை மாவட்டங்களில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் திடீரென குடியேற்றப்பட்டிருந்தனர். நூற்றாண்டுகாலமாக, பரம்பரை பரம்பரையாக பயிர் செய்த இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

இன்றும் கூட, இந்தக் காணிகளுக்குரிய அனுமதிப் பத்திரங்களை மக்கள் வைத்துள்ளனர். சட்டவிரோதமாக இந்த மக்களின் காணிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்த கையுடன் தங்கள் காலில் நிற்பதற்கு அவர்கள் முயற்சிக்கும் போது , 30 ஆண்டுகால பொருளதார பின்னடவைக்கு பின்னர் அவர்களின் காணிகள் கைவிட்டு சென்று மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று, மீண்டெழ முயற்சிக்கும் போது இந்த காணிகள் அவர்களுடையது அல்லவெனவும், வேறொருவருடையது எனவும் கூறப்படுகின்றது.

அந்த இடங்கள் திட்டமிட்ட வகையில் புவியியல் ரீதியில் மாற்றப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள், உள்ளூராட்சி சபைகளை கூட தமிழ் மக்களின் கைகளில் இருந்து பறித்தெடுத்து, சிங்கள மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த யாதார்த்தத்தையே நாங்கள், எதிர்கொண்டுள்ளோம்.

இந்த சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள், மூலம் சனத்தொகை பரம்பலை மாற்றியமைத்து, 30 ஆண்டுகளாக யுத்ததால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபக்ஸ அரசாங்கம் மேற்கொண்டது.

ராஜபக்சவினர் எந்தவொரு கரிசனையையும் கொள்ளவில்லை. சிங்கள பௌத்த தேசியவாதம், சிங்கள பௌத்த இனவாதம், காரணமாக எவ்வாறான தாக்கம் ஏற்படும், மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து அவர்கள் கருத்தில் எடுக்கவில்லை” - என்றார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014