இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைக்கு சினோபெக் பச்சைகொடி!
இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைக்கு சினோபெக் நிறுவனம் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கை வரலாற்றில் மிகப்பாரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில் இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம்
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 2 இலட்சம் கொள்கலன் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தினூடாக, உள்ளூர் சந்தையில் 20 சதவீத எரிபொருளை மாத்திரமே விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில், நீண்டகாலமாக நீடித்துவந்த சந்தை அணுகல் தொடர்பான சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |