நாடுதழுவிய ரீதியில் செயற்பாடுகளை ஆரம்பிக்க தயாராகும் சினோபெக்
                                    
                    Fuel Price In Sri Lanka
                
                                                
                    Hambantota
                
                                                
                    China
                
                                                
                    Petrol diesel price
                
                        
        
            
                
                By Kathirpriya
            
            
                
                
            
        
    இந்த மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் அனைத்து செயற்பாடுகளையும் சினோபெக் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் மத்தேகொடையில் சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிலையம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்
அதுமாத்திரமல்லாமல், சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினை அம்பாந்தோட்டையில் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,அவர் குறிப்பிட்டார்.
இதற்கான உறுதிப்பாட்டை சினோபெக் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பான முன்மொழிவுக் கோரிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                        
                        
                        
                
        
    