சினோபெக்கின் எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பகிர்ந்த அவர், 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ள குறிப்பிட்டுள்ளார்.
விநியோக நடவடிக்கை
எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சந்தையில் புதிய விநியோகஸ்தர்களின் வருகையால், எரிபொருட்களுக்கான அன்னிய செலாவணி தேவைகள் தளர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
1st fuel cargo of Sinopec has commenced discharging & the 2nd cargo will arrive tomorrow. Entry of new retail suppliers to the domestic market will ease the forex requirements for petroleum products as the suppliers will bring in products on a 12 month financing facility from… pic.twitter.com/q7M11kvA07
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 1, 2023
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)