உயிரிழந்த தாயின் அவா: நிறைவேற்றிய அரசியல் கைதியின் சகோதரி
அரசியல் கைதியின் சகோதரி ஒருவர் தனது தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முகமாக சிறார்களுக்கு உணவூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று யாழ். அராலியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயார் தனது கையினால் தனது மகனுக்கு உணவூட்ட வேண்டும் என்ற அவாவில் இருந்துவந்துள்ளார்.
இருப்பினும், அவரது மகனான பார்த்தீபன் விடுதலையாகாத நிலையில் தாயாரின் இறுதி ஆசையும் நிறைவேறாத நிலையில் இயற்கை எய்தினார்.
தாயாரின் ஆசை
பார்த்தீபன் இதுவரை விடுதலையாகாத நிலையில் அவரது தாயாரின் ஆசையை நிறைவேற்றும் முகமாக பார்த்தீபனின் சகோதரி வாஹினி இன்றையதினம் (10) அராலி பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தனது கரங்களால் உணவூட்டி தாயாரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும், அரசியல் கைதிகளின் விடயத்தில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினது போலி முகங்களின் மீதான வெறுப்பினையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
