தெற்காசிய பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை பில்லியனர்
2025 ஆம் ஆண்டுக்கான தெற்கு ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
இது குறித்த ல்ஃப் நியூஸ் வெளியிட்ட பட்டியல் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
முதலிடத்தில் அம்பானி
இதன்படி, பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார், அவரது சொத்து மதிப்பு சுமார் 118 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நாடுகளின் பணக்காரர்களாக, பாகிஸ்தானின் ஷாஹித் கான் ($13.5B), பங்களாதேஷின் மொசா பின் ஷம்ஷெர் ($12B), நேபாளத்தின் பினோத் சௌதரி ($1.6B), மற்றும் இலங்கையின் இஷார நாணயக்காரா ($1.6B) ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அறிக்கையின்படி, இரண்டாவது இடத்தில் உள்ள ஷாஹித் கானின் சொத்து மதிப்பை விட அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 10 மடங்கு அதிமாகும்.
இஷார நாணயக்காரா
இந்த நிலையில், இஷார நாணயக்காரா 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவர், நீண்ட காலமாக முன்னிலையில் இருந்த தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை பின்தள்ளியுள்ளார்.
LOLC Holdings நிறுவனத்தின் தலைவர் ஆன நாணயக்கார, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்த நிதி மற்றும் முதலீட்டு குழுமத்தை வேகமாக சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
குறிப்பாக, உலகளாவிய மைக்ரோபைனான்ஸ் மற்றும் காப்பீட்டு துறைகளில் LOLC Holdings விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
