சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதிகளில் பொலிஸார் விசேட நடவடிக்கை!
police
jaffna
vaddukkoddai
sithankerny
By Kalaimathy
வட்டுக்கோட்டை மற்றும் சித்தங்கேணிப் பகுதிகளில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பயணத் தடையினை மீறி வீதியில் பயணிப்போரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக தலைமையிலான பொலிஸ் அணியினரால் விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் தேவையற்று நடமாடியவர்கள் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு வீட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்