அடுத்த மாதம் இலங்கையில் கடும் எரிபொருள் நெருக்கடி - வெளியான தகவல்!
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என எரிபொருள் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 100 டொலர்களை நெருங்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.
குளிர் காலநிலை காரணமாக ஐரோப்பாவில் எரிபொருள் பாவனை வேகமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வாரம் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 87 டொலர்களாக அதிகரித்தது. இது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகளவான விலை உயர்வு எனக் கூறப்படுகிறது.
டொலர் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பொருளாதாரத்திற்கு இந்த நிலைமையால் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறான நிலைமையில், இலங்கையில் எரிபொருளின் விலைகளை அதிகரிக்காது போனால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்