5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை - வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைள் 136,265 பேர் இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் வழங்கியுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 15.5 சதவீதமாக காணப்படுகின்றது.
நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எடை குறைந்த குழைந்தைகள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாநகர சபைக்குள் 1460 எடைக்குறைந்த குழந்தைகள் இருப்பதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது.
காரணம்
குடும்ப சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தரவுகளின்படி நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் தோட்டங்கள் என அனைத்து இடங்களிலும் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் ஊட்டச் சத்து குறைபாடுகள் ஏற்பட்டு எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
