கணவன் மனைவியை கடத்தி சென்ற 6 பேர் கைது..!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் இரு நபர்களை கடத்திச் சென்ற ஆறு பேரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரும் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (26) முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளியில் வந்த 6 பேரால் கடத்தப்பட்டதாகவும், தெமட்டகொட விகாரைக்கு முன்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள்

கொழும்பு 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி