யாழில் மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் வியாபாரம்: 06 பேர் கைது (படங்கள்)
யாழ்ப்பாணம் - கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொலைபேசியில் whatsapp சமூக ஊடக செயலியின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நீதிமன்றம் கட்டளை
இந்நிலையில், போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 06 சந்தேகநபர்கள் இன்று(20) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை பொறுப்பதிகாரி காவல்துரறை பரிசோதகர் தெய்வனாயகம் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், இவர்களில் இருவரை மூன்று நாட்களுக்கு காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
விசாரணை
அத்துடன், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்களின் விபரங்கள், சந்தேக நபர்களை விசாரணை செய்து பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சட்டவிரோத போதைமாத்திரைகள் மற்றும் 45 மயக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்தமைக்காக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |