பொறுப்பற்று செயற்படும் பொன்சேகா : திஸ்ஸ அத்தநாயக்க ஆவேசம்
சில விடயங்களில் கட்சியுடன் உடன்பாடு இல்லாவிட்டாலும் பொறுப்பற்ற முறையில் செயற்படமாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) இன்று தெரிவித்துள்ளார்.
“சில விடயங்களில் கட்சி எடுக்கும் நிலைப்பாட்டுடன் நான் உடன்படாத சந்தர்ப்பங்கள் உள்ளன, ஆனால் நான் கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகாவைப்(Sarath Fonseka) போன்று பொறுப்பற்ற முறையில் செயற்படவில்லை” என அத்தநாயக்க இன்று(25) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
பொன்சேகாவின் செயலை அங்கீகரிக்க முடியாது
“நிர்வாகக் குழுவில் அல்லது செயற்குழுக் கூட்டங்களில் கட்சியுடன் எனக்கு இருக்கும் பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறேன். ஒரு உறுப்பினருக்கு பிரச்னை இருந்தால் நிர்வாகக் குழுக் கூட்டத்திலோ, செயற்குழுக் கூட்டத்திலோ, நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலோ பேச வேண்டும். எனவே, கட்சித் தலைமையை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக விமர்சித்த கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் செயலை அங்கீகரிக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
“கட்சித் தலைமை பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து நிர்வாகக் குழு விரைவில் தீர்மானிக்கும் என நான் நம்புகிறேன்,” என அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர(Hirunika Premachandra) ஆகியோருக்கு இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை, எனினும் அவர்களும் சில விடயங்களில் வித்தியாசமான போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது.
ரணிலை பாராட்டிய ராஜித
“ராஜித சேனாரத்ன அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும்(Ranil Wickremesinghe) அரசாங்கத்தையும் மட்டுமே பாராட்டியுள்ளார், அதேவேளை ஹிருணிகா கட்சியைப் பொறுத்த வரையில் தான் எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றி மட்டுமே பேசியுள்ளார்.
எனினும் அவர்கள் பொன்சேகாவைப் போன்று பொறுப்பற்ற முறையில் செயற்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |