யாழில் இளம் பெண்ணிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்: சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி
SK vlog என்ற யூரியூப் சனலில் ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் நபர் ஒருவர் இளம் பெண்ணொருவரை கட்டாயப்படுத்தி காணொளி எடுக்க முயன்ற சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகளினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குறித்த நபர் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் காணொளிகளை யூரியூபில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடமிருந்து பெறப்படும் பணத்தின் மூலம் உதவி செய்பவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு சென்று காணொளியொன்றை பதிவு செய்த போது, அங்கிருந்த இளம் பெண்ணொருவர் தன்னை காணொளியில் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதன்போது, கோபமடைந்த யூரியூபர் அந்த இளம் பெண்ணின் மனதை நோகடிக்கும் வகையிலான வார்த்தை பிரயோகங்களுடன் பேசியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருன்ற நிலையில், இந்த விடயதிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் (Ramanathan Archchuna) எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்