வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை உள்ளடக்கிய ரணிலின் வரவு செலவு திட்டம் : பவித்ரா வன்னியாரச்சி சுட்டிக்காட்டு
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று (13) அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்
அத்துடன், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம்
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமென பவித்ரா வன்னியாரச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாரிய நிவாரணங்கைளை வழங்கும் நோக்கில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம்
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் பவித்ரா வன்னியாரச்சி மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.