தாயக மக்களை அச்சுறுத்தும் சிறிலங்கா இராணுவ உளவுத்துறை - குற்றம் சுமத்தும் தமிழ் எம்பி..!
சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ உளவுத்துறை தாயக மக்களை மிக மோசமாக அச்சுறுத்திக்கொண்டு இருப்பதாகவும், மக்கள் மீது கொடிய சட்டங்களை பயன்படுத்தி பரவலான அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தாயகத்தின் மீதான பௌத்த மத பரவலாக்கம், மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
"அண்மையில் தமிழர்கள் செறிந்து வாழும் திருகோணாமலையில், தாய்லாந்து பிக்குகளை வரவழைத்து புத்தர் சிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்போது குறைந்த எண்ணிக்கையிலான மக்களை கொண்டு அந்த திட்டத்தை இல்லாது செய்தோம். சிறிலங்கா அரசிற்கு எம் இனத்தை காட்டிக்கொடுத்து அவர்களுக்கு துணை நின்ற அடிமைகள் இருக்கின்றார்கள்
அப்படி பட்ட அடிமைகள் இவ்வாறான ஆக்கிரமிப்புக்களுக்கு ஆதரவாகவும், போராடுபவர்களுக்கு எதிராகவும் செயற்படுவார்கள்." என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒரு போதும் ஒற்றையாட்சிக்குள் முடங்கியிருக்கப்போவதில்லை எனவும், தேசம் அமையும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
முழுமையான நிகழ்ச்சி
