தொழில்நுட்ப துறையில் இலங்கை இந்தியாவின் ஆதரவைப் பெறலாம் : அனுரகுமார சுட்டிக்காட்டு
76வருட பேரழிவு அரசியல் கலாசாரத்தை நாங்கள் நிறுத்தவேண்டும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தின் பின்னர் நாடு திரும்பிய போது செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
அனுரவின் இந்திய விஜயம்
“இலங்கை இனிமேலும் ஒரு தனிமைப்பட்ட நாடாக செயற்படமுடியாது, நாடு எதிர்பார்க்கும் மாற்றங்களை அடைவதற்கான சர்வதேச ஆதரவை பெறுவதே இந்த விஜயத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடு இந்தியா, தகவல் தொழில்நுட்ப துறையில் அந்த நாடு மிகுந்த நிபுணத்துவம் கொண்டதாக காணப்படுகின்றது இலங்கை அதன் ஆதரவை பெறலாம்.
சர்வதேச ஆதரவு
76வருட பேரழிவு அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் நிறுத்தவேண்டும், மக்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்ச்சி அவர்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்றது.
அந்த எதிர்பார்ப்பிற்கு தலைமைத்துவம் வழங்குவதும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே எங்களின் நோக்கம் எங்களிற்கு அதற்கான சர்வதேச ஆதரவு அவசியம்.
நாங்கள் அபிவிருத்தியடைந்த நாடோ அல்லது தொழில்நுட்ப திறன் உள்ள நாடோ இல்லை” என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |