117 வீதத்தால் அதிகரித்த இலங்கையின் இளநீர் ஏற்றுமதி
Sri Lanka
Economy of Sri Lanka
By Sathangani
a year ago

Sathangani
in பொருளாதாரம்
Report
Report this article
வெளிநாட்டு சந்தையில் இலங்கையின் இளநீருக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ் வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் தெரிவித்துள்ளன.
110 மில்லியன் ரூபாய் வருமானம்
இதேவேளை 2022 ஆம் ஆண்டு 11 மில்லியன் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வருடம் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இளநீரின் தொகை 14 மில்லியன் எனவும் இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபாய் எனவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
