சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ள தாமரை கோபுரம்!
Colombo
Sri Lanka
By Eunice Ruth
சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை (22) கொழும்பிலுள்ள தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளது.
தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
மூளையழற்சி நோய்
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஐந்து இலட்சம் பேர் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆபத்துமிக்க நரம்பியல் நோய் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் அண்மைய திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாறு ஒளிரவிடப்படவுள்ளது.
சர்வதேச மூளையழற்சி தினத்தில் மாற்றத்தை எற்படுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள பலருடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க கொழும்பு தாமரை கோபுரம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்