வெளிநாட்டு முதலீடுகள் : ஜே.வி.பியின் நிலைப்பாடு!
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரும் வெளிநாட்டவர்களை எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிர்க்காது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையேிலேயே, இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய பயணம்
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர், இந்தியாவுக்கான பயணத்தை நிறைவு செய்து இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், அவரது இந்தியாவுக்கான பயணம் பாராட்டத்தக்கது என கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதிருப்தி
எனினும், அனுரகுமாரவின் இந்தியாவுக்கான பயணம் மற்றும் அவரது சந்திப்புக்கள் குறித்து, அவரது கட்சியின் தொழிற்சங்கம் அதிருப்தி வெளியிடும் என கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு பயணங்களை மேற்கொள்வது சாதாரணமான ஒன்று எனவும், மாதாந்தம் பலர் இவ்வாறான தனிப்பட்ட மற்றும் உத்தியோகப்பூர்வ பயணங்களை இந்தியாவுக்கு மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |