பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

Election Commission of Sri Lanka Government Employee General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Nov 04, 2024 08:24 AM GMT
Report

புதிய இணைப்பு 

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (04) அமைதியான முறையில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் கண்காணிப்பின் கீழ் குறித்த தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

பிரதேச செயலகத்தின் 116 உத்தியோகத்தர்களும், சமூக நீர்வழங்கல் சபையின் 05 உத்தியோகத்தர்களும், கால் நடை திணைக்களத்தின் 02 உத்தியோகத்தர்கள் என மொத்தமாக 123 வாக்காளர்கள் இங்கு தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்தனர்.

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு | Sl General Election Today Postal Voting 3Rd Day

சுமுகமான முறையில் இடம் பெற்ற தபால் மூல வாக்களிப்பினைக் கண்காணிக்க பெப்ரல் அமைப்பு மற்றும் அரச கண்காணிப்பாளர்களும் களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்று (04) இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றும் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாத வாக்காளர்களுக்கு நவம்பர் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் தமது பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்தார்.

கனடா தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் - அச்சத்தில் மக்கள்

கனடா தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் - அச்சத்தில் மக்கள்

தேர்தலுக்கான வாக்களிப்பு 

அத்துடன், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கு குறித்து தெளிவுபடுத்தும் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு | Sl General Election Today Postal Voting 3Rd Day

அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு உள்ளது, அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிற்கு வழங்கப்படலாம்.

வாக்கு அளிக்கப்படும் அரசியல் கட்சி அல்லது சின்னத்தின் முன் அல்லது சுயேட்சைக் குழுவின் எண் மற்றும் சின்னத்திற்கு முன் உள்ள இடத்தில் புள்ளடி அடையாளம் இடப்பட வேண்டும்.

இஸ்ரேலை நோக்கி சீறிப்பாயப் போகும் ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள்

இஸ்ரேலை நோக்கி சீறிப்பாயப் போகும் ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள்

விருப்பு வாக்கு 

அதன்பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று வேட்பாளர்களுக்கு மேற்படாதவாறு விருப்பு வாக்கினை அளிக்க, ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட வரிசை எண் கொண்ட பெட்டியில் புள்ளடி அடையாளத்தை இடவேண்டும்.

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு | Sl General Election Today Postal Voting 3Rd Day

இதற்கிடையில், வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கு வாக்களித்திருந்தால் அல்லது வாக்குச் சீட்டில் ஏதேனும் குறியீடு வைக்கப்பட்டால், அந்த வாக்கு செல்லுபடியாகாது.

மேலும், வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கின் போது புள்ளடி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016