மகிந்த - கோட்டாபய மீதான கனடாவின் தடைக்காக பதறும் சிறிலங்கா
சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான ராஜபக்ச சகோதரர்கள் உள்ளடங்கலாக 4 அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்துள்ளமை குறித்து சிறிலங்கா அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் டானியல் பூட்டை நேரில் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி, கனேடிய அரசாங்கம் விதித்துள்ள ஒரு தலைபட்சமான தடைகளுக்கு அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
இலக்கு வைக்கப்பட்ட தடை

சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்களுக்காகப் சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த நான்கு இலங்கையர்கள் மீது கனேடிய அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளது.
அந்த வகையில் இந்தச் சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை தவிர சிறிலங்கா படை சிப்பாய் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் கனடாவில் சொத்துகளை வைத்திருக்கும் பட்சத்தில் அவை முடக்கப்படும் என கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவிற்குள் அவர்களை உள்நுழைய அனுமதிக்க முடியாது எனவும் ஜஸ்ரின் ட்ரூடோவின் லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு

அத்துடன் கனேடிய அரசினால் தடைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த நான்கு பேருடனும் கனேடியர்கள் கனடா நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எந்தச் சொத்து சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது எனவும் மேலும் கனடியர்கள் அவர்களுக்கு எவ்வித நிதியுதவிகளும் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கான கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் டானியல் பூட்டை நேரில் சந்தித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்