'கட்டார் செரிட்டி' மீதான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

Sri Lanka Qatar Kanchana Wijesekera
By Vanan Jun 30, 2022 11:42 AM GMT
Report

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் 'கட்டார் செரிட்டி' எனப்படும் கட்டார் அறக்கட்டளை நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டாருக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் கஞ்சன, நேற்று மாலை கட்டார் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

'கட்டார் செரிட்டி' மீதான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

2019 ஆம் ஆண்டு கட்டார் செரிட்டி என்ற குறித்த தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது கஞ்சன விஜேசேகர குறித்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கு தொடர்பில் 'கட்டார் செரிட்டி' நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக இலங்கை பெயரிட்டிருந்தது.

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு குறித்த தொண்டு நிறுவனம் நிதியளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதேவேளை, கட்டார் செரிட்டியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தமை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அவரைக் குற்றம் சாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியிருந்தார்.

கட்டார் செரிட்டிக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் உள்ளதுடன், அங்கு பணியாற்றிய உள்நாட்டு சேவையாளர்களும் உள்ளனர்.

அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு 

மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று பெயரிட்டாலும், அதன் சேவையாளர்கள் எவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு கொழும்பில் 'கட்டார் செரிட்டி' தொண்டு நிறுவனத்தின் இலங்கை அலுவலக திறப்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து, சஜித் பிரேமதாச பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024