அரச நிறுவனங்களுக்கு சேவைக்காக செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
Government Employee
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
நாட்டின் அரச நிறுவனங்களில் சேவை பெறும் எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்களம் மொழிகளில் தனக்கு தேவையான சேவைகளை பெற்றுகொள்ளலாம்.
இதனை, பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியலைப்பு
தொடர்ந்து அவர்,
"சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகவே நாட்டில் உள்ள எவரும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரச நிறுவனங்களில் தமக்குரிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இது அரசியலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது." என அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி