புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் (Chemmani mass graves) அமைந்துள்ள மனித புதைகுழி அமைந்துள்ள பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மனித புதைகுழியை பார்வையிட்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
அரியாலையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பகுதியில் இன்று (04.08.2025) திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
யாழ். செம்மணி புதைகுழிகளில் இன்று வரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனித புதைகுழிகள் இருக்கின்றனவா என்று ஆராய ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இந்தநிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியைப் பார்வையிடவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
