இலங்கையின் நீதித்துறை தொடர்பில் இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கை ஆட்சியாளர்கள் நீதித்துறையின் சுயாதீனத்தை பேண வேண்டும் என இங்கிலாந்து வேல்சின் சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குமாறு தேர்தல் திணைக்களம் கோரி வருகின்றது, ஆனால் அந்த நிதி இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, நீதிபதிகள் நாடாளுமன்ற குழுவின் முன்னிலையில் முன்னிலையாக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம்
இந்த நிலையிலேயே இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
ஒழுக்காற்று சிறப்புரிமை குழுவின் விசாரணை முடிவடைவதற்கு முன்னர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்துவது குற்றம் என இலங்கையின் இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார் என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என தொடர்புடைய அனைத்து அதிகாரிகளிற்கும் உத்தரவிடவேண்டும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை செயற்பாடுகளில் தேவையற்ற, பொருத்தமற்ற தலையீடுகள் இருக்ககூடாது நீதித்துறையின் தீர்மானங்களை மாற்றமுடியாது எனவும் ஐநா தெரிவித்துள்ளது என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
