ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையினர்: வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா (Rohan de Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் புலனாய்வுத்துறையினர் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள்.
தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக எமக்குத் தெரியவந்துள்ளது.
தாக்குதலின் பின்னணியிலிருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண முடியாதளவிலேயே நாட்டின் பாதுகாப்புத்துறை காணப்படுகின்றது” என ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
