சுமந்திரனின் கருத்துக்கள் நகைச்சுவையாகவுள்ளது: வெற்றியை கொண்டாட தகுதி இல்லை
தேர்தல் முடிவுகள் தொடர்பில் யாழ். ஊடக மையத்தில் சட்டத்தரணி சுமந்திரன் (M.A Sumanthiran) தெரிவித்த கருத்துக்களை பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்தது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் விமர்சித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுமந்திரனின் பேச்சை கேட்க மிகவும் நகைச்சுவையாக இருக்கின்றது ஏனென்றால் சுமந்திரனுக்கு இந்த வெற்றியை கொண்டாட எந்த தகுதியும் இல்லை.
காரணம், சுமந்திரனின் கொள்கையின் நிலைப்பாடு என்பது அனைவரும் அறிந்ததே ஆகையால் தான் முற்றுமுழுதாக கடந்த தேர்தலில் அவர் மக்களால் அப்புறப்படுத்தப்பட்டார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு தேசிய மக்கள் சக்தி துரத்தப்பட்டதோ அன்று அவ்வாறுதான் தமிழரசுக்கட்சியை மக்கள் துரத்தியிருந்தனர்.
அவ்வாறு, துரத்தப்பட்ட கட்சியில் இருந்து பின்வாசல் வழியாக பதில் பதில் என கூறி நாடாளுமன்றம் வரை இழுத்து சென்றுவிட்டு தற்போது தான் ஒரு தந்தை செல்வா என கற்பனை செய்துகொண்டு கட்சியை தனது படியில் வைத்துகொண்டு அதற்கு வலது கரமாகவும் மற்றும் இடது கரமாகவும் சி.வி.கே சிவஞானத்தையும் சத்தியலிங்கத்தையும் வைத்துகொண்டு உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை நேரடியாக களமிறக்கி வெற்றியை கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் கட்சிகளின் எதிர்காலம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசு மற்றும் அவர் தெரிவித்த பலதரப்பட்ட அரசியல் கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
