விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை - வெளியான அபாய நிலை
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Beulah
இவ்வருட இறுதிக்குள் அரச வைத்தியசாலைகளில் 750 விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மருத்துவமனைகளுக்கு 2,250 நிபுணர்கள் தேவைப்பட்டாலும், கடந்த ஆண்டு இறுதியில் 300 நிபுணர்கள் பற்றாக்குறை காணப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு டிசம்பரில் 63 வயதை பூர்த்தி செய்த 55 சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
அபாயம்
இந்நிலையில், 60 வயதில் ஓய்வு பெறும் சட்டம் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், டிசம்பர் 31ஆம் திகதி ஒரே நேரத்தில் 250 சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெறும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்