தமிழர்களை மீண்டும் சினம்கொள்ள வைத்த சரத் வீரசேகரகவின் பதில்..!

Parliament of Sri Lanka S. Sritharan Sarath Weerasekara Mullivaikal Remembrance Day Sonnalum Kuttram
By Pakirathan May 24, 2023 10:35 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

தமிழ் மக்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி வீசும் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் முக்கியமான ஒருவராக சரத் வீரசேகர இருக்கிறார்.

நீதிக்காக போராடும் தமிழ் மக்களின் விடயங்களில் இந்த அரசியல்வாதி வெளியிடுகின்ற இனத்துவேச கருத்துக்களானது தமிழ் மக்களை தொடர்ச்சியாக சீற்றம் கொள்ள வைக்கிறது.

நேற்றைய தினம் இடம்பெற்ற பந்தயம், சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், போர் காலத்தில் சிறிலங்கா அரச படைகள் நிகழ்த்திய போர்க் குற்ற மீறல்கள் குறித்து குறிப்பிட்டார்.

இந்தநிலையில், இதற்கு பதிலடியாக சரத் வெளியிட்டுள்ள கருத்துக்களானது, தமிழ் மக்களை மீண்டும் சினம் கொள்ள வைப்பதாக அமைந்துள்ளது.

இலங்கையில் 2009 ம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்தின் போது இரசாயனக் குண்டுத் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மூன்று இலட்சம் தமிழர்களை பணயக்கைதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த போது எங்கு போனீர்கள் என சிறீதரன் எம்.பியிடம் கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் அவர்,

"இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களானது அர்த்தமற்றவை.

யுத்தத்தில் இராணுவத்தினர் இரசாயனக் குண்டுகள் எவையும் பயன்படுத்தவில்லை, இது அர்த்தமற்ற கருத்தாகும்.

இரசாயனக் குண்டுகள் இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை பல அறிக்கைகள் காட்டுகின்றது.

சிறிலங்கா படையினர் தமிழ் மக்களை கொன்றார்கள் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

2 இலட்சத்து 95 ஆயிரம் பொதுமக்களை பாதுகாத்தே இறுதி யுத்தமானது முடிவு பெற்றது.

இனவழிப்பு எனக் குறிப்பிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது." இவ்வாறு முரணான ஒரு கருத்தை சரத் கூறியுள்ளார்.

இவரது இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். 

ஈழத்தை கனடாவில் ஸ்தாபியுங்கள்

"கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.

மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்." இவ்வாறு கனடா பிரதமரின் அறிக்கைக்கு சரத் வீரசேகர தனது பதிலை வழங்கியுள்ளார்.

மேலும் அவர்,

"புலம் பெயர்ந்து வாழும் புலம்பெயர் அமைப்புக்கள் மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்கள்.

இதற்காக ஐரோப்பிய நாடுகள் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது.

அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தியே அவர் இவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இவரது கருத்துக்கு இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடனாவில் புலம் பெயர் தமிழர்கள் வளம் பெற்றுள்ளார்கள்.

இவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே கடனாவின் பிரதமர் இலங்கை தொடர்பில் முறையற்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையை காட்டிலும் கனடா பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் தொடர்பில் கடனாவின் பிரதமருக்கு உண்மையில் கரிசனை,அக்கறை காணப்படுமாக இருந்தால் கனடாவில் ஈழ இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் ஈழத்தை கோரவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இன்றும் ஈழத்துக்காக போராடுகிறார்கள்.

நாடு முழுவதும் தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள், எங்கும் பிரச்சினையில்லை, அரசியல்வாதிகள் மாத்திரமே பிரச்சினைகளை உருவாக்கி குறுகிய இலாபம் பெறுகிறார்கள்." என்றார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016