22.1 வீதமாக குறைந்துள்ள பணவீக்கம்
Sri Lanka
Sri Lanka Inflation
By Beulah
தேசிய நுகர்வோர் விலை குறியீட்டின்படி மே 2023இல் பணவீக்கம் 22.1 வீதமாக குறைந்துள்ளது.
2023 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக பதிவாகி இருந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வகையில், ஏப்ரல் 2023இல் 27.1 வீதமாக பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் வருடாந்திர பணவீக்கம் மே 2023இல் 15.8 வீதமாக குறைந்துள்ளது.
வருடாந்திர பணவீக்கம்
மேலும், ஏப்ரலிலும் 39.0 வீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்திர பணவீக்கம் மே மாதத்தில் 27.6 வீதமாக கணிசமாக குறைந்துள்ளது
