ஒரு வருடத்தில் பல பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்!
ஒரு வருட காலத்தில், 109 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட நச்சு போதைப்பொருட்களைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில், கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகளின் கீழ், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை மட்டுமே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 68 பில்லியன் ரூபாய் பெறுமதியான நச்சு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
நேற்றைய தினமும் (24) மாத்தறை, தலல்ல பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இதற்கமைய, 561 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்ததுடன், அவற்றின் பெறுமதி சுமார் 11.8 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |