புதிய ஜனாதிபதி இலங்கை மக்கள் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் : சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை
9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இலங்கை வாழ் அனைத்து மக்களையும் சம நோக்கோடு அணுக வேண்டும் என சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இந்த நாட்டில் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை வலுவூட்டி செயற்படுவதற்கு சர்வதேச இந்து மத பீடம் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதாக அதன் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் இம்முறை கூடுதலான வாக்குகளை புதிய ஜனாதிபதிக்கு அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றியில் வடகிழக்கு மக்களும் பங்கெடுத்தமை ஒரு பாராட்டத்தக்க விடயம்.
புதிய ஜனாதிபதி
சகல மதங்களையும் சகல இனங்களையும் சுய கௌரவத்தோடு நடாத்தி கலை கலாச்சாரங்களை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அனைத்து விதத்திலும் புதிய ஜனாதிபதி பங்களிக்க வேண்டும்.
அத்துடன் மக்கள் தத்தம் இனங்களின் அடையாளங்களை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்“ என அவரது
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |