மொட்டுக் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் பசில் - சாகர தெரிவித்த விடயம்!
"அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி வேட்பாளரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும், அந்த வேட்பாளர் பசில் ராஜபக்சவாகக் கூட இருக்கலாம்."
இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அதிபர் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதிபர் வேட்பாளர்

அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையின் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமும் நான்கு மாதங்களும் இருக்கின்றது.
ஆகவே, சரியான நேரத்தில் வெற்றி வேட்பாளரை எமது கட்சி அறிவிக்கும், சில சமயங்களில் அந்த வேட்பாளர் பசில் ராஜபக்சவாகக்கூட இருக்கலாம்.
நாட்டின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டே அதிபர் தேர்தல் தொடர்பில் எமது கட்சி முடிவெடுக்கும்." என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.