மொட்டு கட்சியில் வெடித்தது பிளவு - முக்கிய தலைகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்
Dullas Alahapperuma
G. L. Peiris
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
By Sumithiran
பொதுஜன பெரமுனவில் பதவி மாற்றம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பதவிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெரமுனவின் தேசிய மாநாட்டில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிராக செயற்பட்டவர்களின் பதவி பறிபோகும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்ட மற்றும் தற்போது கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் சில கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாக காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்ப்பதென தீர்மானித்திருந்தது.
ஆனால், கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் பலர் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.