நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதி தீர்மானம்
sri lanka
meeting
parliament
By Vanan
திட்டமிட்டபடி எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் முடிவெடுக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மஹந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்கிழமை தொடக்கம் 20ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி