நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு - பதவியை துறந்த முஜிபுர்!
சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழுவின் ஏகமானதான முடிவின் பிரகாரம் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முஜிபுர் ரஹ்மானின் பதவி விலகலால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகல் அறிவிப்பு
மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளமை காரணமாகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் வேட்புமனுத் தாக்கலுக்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் போது, நாடாளுமன்றின் சார்பாக அவருக்கு சபாநாயகர் வாழ்த்து தெரிவித்தார்.
கோரிக்கை
அத்துடன், அமைதியான முறையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வழிவகுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றுக்கு தெரிவான தனக்கு வாக்களித்த 87,000 பேருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற பணிக்குழாமினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
