பொலன்னறுவை மாவட்டத்தை கைப்பற்றிய அநுர தரப்பு: வெளியானது இறுதி முடிவு
புதிய இணைப்பு
10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 159,010 வாக்குகள் (4 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 43,822 வாக்குகள் (1 ஆசனங்கள்)
சர்வஜன அதிகாரம் (SB)- 8,587 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 5,153 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 4,646 வாக்குகள்
மெதிரிகிரிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 36147 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9850 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சர்வஜன அதிகார கட்சி (SB) 2404 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1163 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொலன்னறுவை - பொலன்னறுவை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 66,399 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 22,650 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சர்வஜன அதிகார கட்சி (SB) 3,902 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,782 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,010 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொலன்னறுவை - மின்னேரியா தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 40,412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,138 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,394 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி 1,238 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பொலன்னறுவை தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 16,052 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,184 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 425 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 230 வாக்குகளைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |